சுவிஸில் குறைந்து வரும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு விலைகள்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிஸில் கடந்தாண்டு இறுதி முதலே வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை சரிந்து வருவது தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவலை Swiss Real Estate Offer Index வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது.

ஒரு குடும்பம் வசிக்கும் வீடுகளின் விலை 0.8 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த யூலையில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு சதுர அடி மீட்டர் விலை 7,350 பிராங்குகளாக இருந்த நிலையில் டிசம்பரில் 6,900 பிராங்குகளாக குறைந்துள்ளது.

இந்தாண்டு விலையில் இன்னும் சரிவு ஏற்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

அதே நேரத்தில் லேக் ஜெனிவா பகுதியில் 1 சதவீதமும், ஜூரிச்சில் 0.4 சதவீதமும் வீடுகளின் விலை உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

வாடகையை பொருத்தவரை மத்திய சுவிட்சர்லாந்தில் 1.6 சதவீதமும், டிக்கினோவில் 2.8 சதவீதமும் குறைந்துள்ளது.

குறைவான குடிவரவு மற்றும் அதிகரிக்கும் கட்டுமானம் ஆகியவைகள் வாடகைதாரர்களுக்கு பயனளிக்கும் என தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்