இறந்து 20 வருடத்துக்கு பின்னர் இளவரசி டயானாவுக்கு கிடைக்க போகும் கெளரவம்!

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவுக்கு சிலை வைத்து கெளரவப்படுத்த அவர் மகன்கள் முடிவு செய்துள்ளார்கள்.

பிரித்தானியாவின் இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி பாரிஸில் நடந்த சாலை விபத்தில் பலியானார்.

அவர் இறந்து 20 ஆண்டுகள் கழித்து அவருக்கு சிலை அமைக்க அவர் மகன்களான இளவரசர் வில்லியமும், இளவரசர் ஹரியும் முடிவு செய்துள்ளார்கள்.

இந்த சிலையானது டயானா வாழ்ந்த கென்சிங்டன் அரண்மனை அருகில் உள்ள பொது மைதானத்தில் அமைக்கப்படவுள்ளது

டயானா சிலையை செதுக்கும் சிற்பி யார் என்பது இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி விடுத்துள்ள கூட்டு அறிக்கையில், எங்கள் தாய் உயிரிழந்து 20 வருடங்கள் உருண்டோடி விட்டன. அவருக்கு நிரந்தர சிலையை அமைத்து பிரித்தானியா மர்றும் உலகம் முழுவதும் அவர் நேர்மறையான எண்ணங்களை அங்கீகரிக்கும் நேரம் தற்போது தான் வந்துள்ளது.

எங்கள் தாய் டயானா பல உயிர்களுக்கு உதவியுள்ளார். உருவாக போகும் அவர் சிலை அவர் வாழ்க்கை மரபுகளை பிரதிபலிப்பதாக அமையும் என நம்புவதாக கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments