பிரித்தானியாவில் பணியாற்றுபவர்களுக்கு கவலை தரும் விடயம்

Report Print Vethu Vethu in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானியாவில் பகுதிநேர மற்றும் நாள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் தொடர்பில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாளாந்த கொடுப்பனவு முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரித்தானிய அரசியல் கொள்கை வகுப்பாளர் Matthew Taylor தெரிவித்துள்ளார்.

எனினும் நவீன வேலை நடைமுறைகளுக்கான ஒரு புதிய வரைபடத்திற்கமைய பூஜ்ய மணி நேர ஒப்பந்தங்களை சில சந்தர்ப்பங்களில் தொடர அனுமதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் பொருளாதாரம் தொடர்பில் Taylor ஆக்கபூர்வமான தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

அதற்கமைய தற்காலிக சுய தொழிலாளர்கள் போன்ற துப்பரவாளர்கள் மற்றும் அலங்கரிப்பாளர்களுக்கான கைக்காசுக் கொடுப்பனவைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கொடுப்பனவுகளுக்கு வருடத்திற்கு 6 பில்லியன் பவுண்டுகள் செலவிடப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவற்றிற்கு வரிவிதிப்புகள் ஒன்றும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

சுயாதீனமான நபர்களை வாடகைக்கு அமர்த்தும் பெரும்பாலானவர்கள், உதாரணமாக, தோட்டக்காரர்கள், சாளர துப்பரவாளர்கள் அல்லது குழந்தைகளை பார்த்து கொள்பவர்கள் அந்த தொழிலுக்கான வரி செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவ்வாறு பொருளாதாரம் குறித்து சிந்திப்பவர் இருக்கின்றார்களா என்பதனை நம்ப முடியாதுள்ளது. இந்த செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு சிறப்பானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த கைக்காசுக் கொடுப்பனவைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த நடவடிக்கையை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் கூடுதல் வருவாயில் பல பில்லியன்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த பெருமளவானோர் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மாணவர் வீசாவில் சென்ற பலர் நாள் சம்பளத்திற்கு வேலை செய்து வருகின்றனர்.

இவ்வாறான புதிய நடைமுறை அமுலாகும் பட்சத்தில் பலர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments