பயங்கரவாத சதி திட்டம்: பிரித்தானிய தாயாரும் மகளும் கைது

Report Print Arbin Arbin in பிரித்தானியா
225Shares
225Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் முதன்முறையாக பயங்கரவாத சதி திட்டம் தொடர்பில் மூன்று பெண்கள் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் குடியிருக்கும் Mina Dich (43), மற்றும் அவர் மகள் Rizlaine Boular (21) ஆகிய இருவரையுமே பொலிசார் பயங்கரவாத சதி திட்டம் தொடர்பில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் 20 வயதான Khawla Barghouthi என்பவர் மீதும் பயங்கரவாத சதி திட்டத்திற்கு உதவியதாக கூறி வழக்கு பதிந்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும் என Old Bailey நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Westminster பகுதியில் கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை பொலிசார் தேடிவந்த நிலையில் இந்த மூவரும் கைதானதாக கூறப்படுகிறது.

Dich மற்றும் அவரது மகளும் இஸ்லாமிய உடையிலேயே நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

இந்த மூவரின் கைதானது பிரித்தானிய வரலாற்றில் பயங்கரவாத சதி திட்டம் தொடர்பில் முதன்முறை என கூறப்படுகிறது. மேலும் வழக்கின் தன்மை கருதி அந்த மூவரின் புகைப்படங்களை வெளியிட அதிகாரிகள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்