பிரித்தானியாவில் வெள்ளப் பெருக்கு: மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Report Print Trinity in பிரித்தானியா
218Shares
218Shares
lankasrimarket.com

கடும் மழையால் பிரித்தானியா நாடு முழுதும் 59 இடங்களில் பேரிடர் எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மழை இன்னமும் வலுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனின் சில பகுதிகளில் மாதத்தின் நான்கில் மூன்று பங்கு தொடர்மழைபெய்து வருகிற நிலையில் அங்கு இன்று கிட்டத்தட்ட 60 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கிறது.

Dorset, Northamptonshire and Cambridgeshire உடன் இன்னும் 53 இடங்களும் இதில் அடங்கும்.

இதில் மேற்கு யார்க்ஷர் பகுதிகளில் அதிககனமழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிர எச்சரிக்கை விடப்பட்ட 6 இடங்களில் டோர்செட் மற்றும் வடமேம்ப்டன் மற்றும் பீட்டர்போரோவில் உள்ள நெனேபள்ளத்தாக்கின் பகுதிகளில் உள்ள சிடில், டாரன்ட் மற்றும் விண்டர்பெர்ன் பள்ளத்தாக்கின் பகுதிகள் அடங்கும்.

வெள்ளி வரை நீடிக்கும் இந்தப் பெருமழை வாரஇறுதியில் மாறி வானிலை சீரடையும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்