கண்களால் காதல் பேசும் இளவரசர் ஹரி மெர்க்கல் ஜோடி: கண்டுபிடித்த உதட்டசைவு நிபுணர்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பக்கிங்காம் மாளிகையின் பால்கனியில் முதன்முறையாக தோன்றிய இளவரசர் ஹரி மெர்க்கல் ஜோடியின் கண்ணசைவுக்கும் உதட்டசைவைக்கும் உதட்டசைவு நிபுணர்கள் கொடுத்துள்ள விளக்கத்துடன் கூடிய வீடியோ மக்களிடையே பிரபலமாகி வருகிறது.

கண்களால் காதல் பேசும் ராஜ குடும்பத்தின் புது ஜோடி ஒவ்வொரு செய்கையிலும் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருகிறது.

பால்கனியில் முதல் முறை தோன்றிய மெர்க்கலிடம் பதட்டமாக இருக்கிறதா என ஹரி கேட்க, பதட்டம் மாறாமலேயே ஆம் என்கிறார் மெர்க்கல்.

கண்களால் தன் நிலையை கணவனுக்கு தெரியப்படுத்த மெர்க்கலை புன்னகையால் ஆறுதல் படுத்துகிறார் ஹரி.

இந்தக் காட்சிகள் புகைப்படக்காரர்களின் கண்களுக்குத் தப்பவில்லை. அதை பத்திரிகைகளில் வெளியிட்டு அதற்கு விளக்கமும் கொடுத்து விட்டார்கள்.

ராஜ வழக்கங்களுக்கு புதியவரான மெர்க்கலிடம், அடுத்து வானில் வண்ண புகையுடன் விமானங்கள் பறக்கும் அப்போது நாம் அனைவரும் மேலே பார்க்க வேண்டும் என சிறு பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பது போல் காதல் கணவன் ஹரி கற்றுக் கொடுக்க சரி என தலையசைக்கிறார் அவர், நல்ல மருமகளாக முடிவு செய்து விட்டார் போலும்.

சற்று நேரத்தில் வானில் வண்ணப் புகையுடன் விமானங்கள் பறக்க பக்கிங்காம் மாளிகையின் பால்கனியில் நிற்கும் ராஜ குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மரபுக்கிணங்க வானில் பார்வையை பதிக்கிறார்கள், மேகன் மெர்க்கலும்தான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்