அறிமுகமான ஒரே வாரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்த செயலி!

Report Print Kabilan in ஆப்ஸ்

உலக சந்தையில் பிரபல மியூசிக் ஸ்டிரீமிங் சேவையாக இருக்கும் Spotify செயலி, இந்தியாவில் அறிமுகமான ஒரு வாரத்திற்குள் பத்து லட்சத்திற்கும் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

Spotify தொழில்நுட்பம் உலகின் அதிக பிரபலமான கட்டண மியூசிக் ஸ்டிரீமிங் சேவையாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த சேவை இந்தியாவில் துவங்கப்பட்ட நிலையில், ஒரு வாரத்திற்குள் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த சேவையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இதில் கட்டணம் மற்றும் இலவச சேவையும் அடங்கும். கட்டண முறையில் பயன்படுத்தும்போது விளம்பரங்கள் இருக்காது. ஆனால், இலவசமாக கிடைக்கும் சேவையில் விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கும்.

இந்தியாவில் இதனை பயன்படுத்த விரும்புபவர்கள் இரண்டு சேவைகளிலும் பயன்படுத்தலாம். Spotify சேவையை உலகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் சுமார் 20.7 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர உலகம் முழுக்க Spotify சேவையை சுமார் 9.6 கோடி பேர் சந்தாதாரர்களாக இருக்கின்றனர்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்