திருநங்கைகளை சிறப்பிக்கும் எமோஜி: வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புதிய முயற்சி

Report Print Kavitha in ஆப்ஸ்

உலக அளவில் பயன்பாட்டில் உள்ள ஆப் வகையில் பேஸ்புக்கிற்கு அடுத்ததாக வாட்ஸ் ஆப் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதில் நாளுக்கு நாளாக பலவகை அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றது.

தற்போது போட்டோக்களை டூடுள் செய்யும் போது எமோஜி மற்றும் ஸ்டிக்கர்களை தேட வழி செய்யும் அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது.

வாட்ஸ்அப் செயலியில் திருநங்கைகளை குறிக்கும் எமோஜி வழங்கப்பட இருப்பது பற்றி தகவல் ஏற்கானவே வெளியாகி இருந்தது.

தற்போது வாட்ஸ்அப் பீட்டா செயலியில் திருநங்கைகளை சிறப்பிக்கும் எமோஜி மற்றும் இத்துடன் மற்ற பாலினத்தவரை குறிக்கும் எமோஜிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதை தவிர எமோஜிபீடியா வலைதளத்தின் உதவியுடன் திருநங்கை எமோஜியை சாட்களில் மறைக்கும் வசதியை சேர்த்திருக்கிறது.

மேலும் இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.56 வெர்ஷனில் வழங்கப்பட்டிருக்கிறது.

திருநங்கை எமோஜி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.73 வெர்ஷனில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இத்துடன் புகைப்படங்களை கொண்டு தேட வழி செய்யும் சர்ச் பை இமேஜ் (Search by Image) அம்சமும் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை சர்ச் பை இமேஜ் (Search by Image) அம்சம் கொண்டு பயனர்கள் அனுப்பிய அல்லது அவர்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானது தானா என கண்டறிந்து கொள்ள முடியும்.

இந்த அம்சம் தற்சமயம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இவைதவிர, வாட்ஸ்அப் செயலியில் ஆடியோக்களை அனுப்பும் முன் அவற்றை கேட்கச் செய்யும் வசதியும் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது.

இத்துடன் ஒரேசமயத்தில் அதிகபட்சம் 30 ஆடியோ ஃபைல்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது.

இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் இந்த வசதியினை விரைவில் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்