பிலிப்பைன்சில் பயங்கர குண்டுவெடிப்பு!

Report Print Fathima Fathima in ஆசியா

பிலிப்பைன்சில் நேற்றிரவு நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு 14 பேர் பலியாகியுள்ளனர், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்சின் தாவோ நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த இரவு நேர மார்க்கெட்டில் நேற்று இச்சம்பவம் நடந்துள்ளது.

இதில் 14 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

24 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து தங்கும் மார்கோ போலோ ஹொட்டல் அருகில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர்.

ஜனாதிபதியின் சொந்த ஊரிலே இத்தாக்குதல் நடந்துள்ளதால், மற்ற நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு Abu Sayyaf என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

Getty Images

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments