உங்கள் வீட்டில் நிறைந்த ஐஸ்வர்யம் நிலைத்திருக்க வேண்டுமா? இப்படி செய்து வாருங்கள் !

Report Print Trinity in ஜோதிடம்
643Shares
643Shares
lankasrimarket.com

உங்கள் வீட்டில் நிரந்தரமாக மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டுமா? எப்போதும் குறையாத செல்வசெழிப்புடன் இருக்க வேண்டுமா? வீட்டில் தங்கிய ஐஸ்வர்யம் நிலைக்க வேண்டுமா?

அப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும்.

அதே போன்று நீங்களும் வீட்டில் வெள்ளி செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் சாம்பிராணி புகை போட்டு வாருங்கள். இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் இருக்கும் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும்.

அந்த சாம்பிராணியை எப்படி போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை கூறுகிறோம். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல அதற்கேற்ற சாம்பிராணியை போட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம்.

சந்தனத்தில் தூபம் போட லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும்

சாம்பிராணியில் தூபம் போட்டால் கண்திருஷ்டி பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்

ஜவ்வாதில் தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்

அகில் தூபமிட குழந்தை பேறு உண்டாகும்

துளசியில் தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்

தூதுவளை தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்

வெண்கடுகில் தூபமிட பகைமை விலகும்

வெண்குங்கிலியத்தில் தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்

நாய் கடுகில் தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்

மருதாணி விதைகளில் தூபமிட சூனிய கோளாறுகள் விலகும்

கரிசலாங்கண்ணியில் தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்

வேப்பம்பட்டையில் தூபம் இட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்

நன்னாரி வேரில் தூபமிட ராஜவஸ்யம் உண்டாகும்

வெட்டி வேரில் தூபமிட காரியசித்தி உண்டாகும்

அருகம்புல்லில் தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்

வேப்பிலை தூபத்தால் சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்

மருதாணி இலை தூபமிட மஹாலக்ஷ்மி வாசம் நிலைக்கும்

மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கி பயன்படுத்தி தீராத செல்வ வளம் பெறுங்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்