உங்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?

Report Print Kabilan in ஜோதிடம்

இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத வீண் செலவுகள் வந்து போகும். வேலையிடங்களில், பணிகளில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களில் சுயதொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பணக்கஷ்டங்கள் தீரும். தொழில் ரீதியான அலைச்சல்களை சந்திக்க நேரிடும். அரசு சார்பில் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் தானாக தேடி வரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்கள் ஈடேறும். புண்ணிய காரியங்களில் மனமகிழ்ச்சி அடைவார்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் வந்து சேரும். இந்த ராசிக்காரர்கள் தங்களது வாக்குத் திறமையால் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பையும், அதனால் நிறைய பலன்களையும் பெறுவார்கள். பதவி உயர்வு சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்வார்கள். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி அடைவார்கள். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து உதவிகளை பெறுவார்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். மாணவர்களுக்கு சிறிது சோதனையான நாளாக அமையும். வெற்றி வாய்ப்புகள் தள்ளிப் போகும் சூழல் உருவாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும். மனதில் வந்துபோன தேவையற்ற குழப்பங்கள் நீங்கி தீர்வு உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமான சூழலை பெற்று தரும். தொழில் சம்பந்தப்பட்ட விடயங்களை சார்ந்து தேவையற்ற பேச்சுவார்த்தைக்களை தவிர்க்க வேண்டியது அவசியம். கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயுள்ள பிரச்சனைகள் குறைந்து உறவுகள் மேலோங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலைத்துறையில் சாதமான நாளாக அமையும். நண்பர்கள் மூலம் பொருளாதார லாபம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு பெருகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இதுவரை பணியில் இருந்து வந்த மந்தத் தன்மை காரணமாக, அவச்சொல் ஏற்பட வாய்ப்புண்டு. பொருளாதார வழியில் அதிக பலன்கள் கிடைக்கும். புதிய வீடு, மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு பிரபல நபர்களின் அமோக ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களால் சாதமான சூழல் உருவாகும். வீண் அலைச்சல்களின் காரணமாக, உடல் சோர்வு உண்டாகும். விவாதங்களில் திறமையால் வெற்றி பெறுவார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு சாதமான சூழல்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையேயான பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு பயணங்களின் மூலம் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும். கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவார்கள். உறவினர்களின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்வார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers