10 மில்லியன் டொலருக்கு ஒரு கிராமம் விற்பனை: வெளியான வினோத விளம்பரம்

Report Print Peterson Peterson in அவுஸ்திரேலியா
10 மில்லியன் டொலருக்கு ஒரு கிராமம் விற்பனை: வெளியான வினோத விளம்பரம்
52Shares
52Shares
ibctamil.com

அவுஸ்திரேலியா நாட்டில் வீடுகள் மற்றும் ஏரிய அடங்கிய ஒரு பரந்த கிராமம் 10 மில்லியன் டொலருக்கு விற்பனைக்கு உள்ளதாக ஒரு வினோதமான விளம்பரம் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Tasmania மாகாணத்தில் Tarraleah என்ற கிராமம் அமைந்துள்ளது.

சுமார் 145 ஹெக்டர் பரப்பளவில் பல வீடுகள், தோட்டம், மீன்கள் நிரம்பிய ஏரி மற்றும் 35 உயர் ரக கால்நடைகள் உள்ள இந்த கிராமம் தான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழில் புரிந்து வரும் John Blacklow என்ற ஏஜெண்ட் தான் இந்த கிராமத்தை விற்பனை செய்ய விளம்பரம் வெளியிட்டுள்ளார்.

10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த கிராமத்தை மொத்தமாக வாங்குவதற்கு தற்போது அவுஸ்திரேலியா, சீனா, ஹோங்-கோங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விற்பனை குறித்து John Blacklow பேசுகையில், ‘முன்னதாக நான் பல ஹொட்டல்களை வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளேன்.

ஆனால், ஒரு கிராமத்தை விற்பனைக்கு பயன்படுத்தியுள்ளது இதுவே முதல் முறை. 33 கட்டிடங்கள் கொண்டுள்ள இந்த கிராமம் 1920-களில் உருவானது.

எனினும், கடந்த 13 வருடங்களாக பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு ஒரு நவீன கிராமமாக இதனை மாற்றியுள்ளேன்’ எனக்கூறியுள்ளார்.

விருப்பம் உள்ளவர்கள் இந்த கிராமத்தை வாங்கி ஒரு மிகச்சிறந்த சுற்றலா தளமாக பயன்படுத்தலாம் என John Blacklow உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments