உலகில் முதன் முறையாக அவுஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோய் ஒழிப்பு

Report Print Kabilan in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தீவிர நடவடிக்கையின் காரணமாக, பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பபை புற்றுநோய் பெருமளவில் ஒழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களை பெருமளவில் பாதித்து உயிரை பறிக்கும் நோயாக கர்ப்பபை புற்றுநோய் உள்ளது. இந்நோயால் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில், பாதிக்கப்பட்ட பெண்களில் 10யில் 9 பேர் மரணிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இந்நோயால் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த எண்ணிக்கையானது சர்வதேச அளவில் பாதியாகும். எனவே, அந்நாட்டு அரசு இதனை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டது.

அதற்காக, கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து கர்ப்பபை புற்றுநோயை ஏற்படுத்தும் ‘எச்.பி.வி’ வைரசை கட்டுப்படுத்தும், தடுப்பூசி மருந்து பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 1991ஆம் ஆண்டிலேயே இத்திட்டம் தொடங்கப்பட்டாலும், 2007ஆம் ஆண்டில் இருந்து தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் சிறுவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், தடுப்பூசி நடவடிக்கையால் தற்போது பெண்களுக்கு கர்ப்பபை புற்றுநோயின் தாக்குதல் மிகவும் குறைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. அதாவது ஒரு லட்சம் பெண்களில் 6 பேரை மட்டுமே கர்ப்பபை புற்றுநோய் தாக்குவதாக கூறப்படுகிறது.

எனவே, வரும் 2022ஆம் ஆண்டுக்குள் அவுஸ்திரேலியாவில் இந்நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers