கடலில் மிதந்து வந்த பாட்டில்.... உள்ளிருந்த துயரமான காதல் கடிதம்! நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி கடற்கரையில் கண்டெடுத்த ஒரு அழகிய காதல் கடிதத்தை பற்றிய செய்திகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Daniel McNally தன்னுடைய மனைவி Kate Challenger உடன் இணைந்து கடந்த ஆகஸ்டு 7-ம் தேதியன்று கடற்கரை பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது கடலில், கடிதத்துடன் ஒரு பாட்டில் மிதந்தது வருவதை பார்த்து அதனை எடுத்து பிரித்து பார்த்துள்ளனர்.

அந்த கடிதத்தில் சீன மொழியில் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்ததால், என்னவென்று தெரியாமல் தங்களுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் உள்ள எழுத்துக்களை மொழி பெயர்த்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி உள்ளூரில் பணிபுரியும் ஒருவர் அதனை மொழிபெயர்த்தும் கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், "நான் இப்போது இந்தியப் பெருங்கடலில் பயணம் செய்கிற ஒரு மாலுமியாக இருக்கிறேன். வீட்டில் இருக்கும் என் வருங்கால மனைவியை நினைத்து வாடுகிறேன்.. எங்கள் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு கொஞ்ச நாட்களுக்குள் கடலில் தூரமாக பயணம் செய்கிறேன். அவளை விட்டு வெளியேறியதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.

என் மனதில் உள்ள ஆழ்ந்த உணர்ச்சிகளை அவளிடம் கொடுத்துவிட்டு ஒரு மிதக்கும் பாட்டில் அதை மூடுகிறேன். என் ஒரே ஆசை, வீட்டிற்கு திரும்பி ஜிங்ஸுடன் ஒரு அழகான, மகிழ்ச்சியான வாழ்க்கையினை நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பதாகும்.

இந்த பாட்டில் ஆழமான கடல்களில் மிதக்கும் என்று எனக்குத் தெரியும், அதை யாரேனும் கண்டுபிடித்து படிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் சொந்த இதயத்தை ஆறுதலடைய செய்ய மட்டுமே செய்கிறேன்.

நான் உன்னை காதலிக்கிறேன், ஜிங். " என எழுதப்பட்டிருந்தது.

இதனை படித்து நெகிழ்ந்த அந்த தம்பதியினர் உடனடியாக அந்த நபரை தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். இதன் உடனடி நடவடிக்கையாக, இணயத்தில் வைரலாக செய்தனர். அதன்படி சீன ஊடகங்களிலும் இந்த கடிதம் செய்தியாக வெளியாக ஆரம்பித்தது. இதனை பார்த்து ஒரு சீன நபர், 'இது என்னுடைய நண்பன் எழுதிய கடிதம் தான்' என கூறியுள்ளார்.

அவர்கள் இருவரையும் பார்க்க வேண்டும் என Kate கூறியுள்ளார். அதற்கு அந்த நபர், தற்போது அது முடியாது. அதில் இருக்கும் என் நண்பனின் காதலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் முடிந்துவிட்டது. அவருக்கு என்று ஒரு கணவன், குழந்தைகள் என குடும்பம் உள்ளது. தற்போது சென்று அவரை பார்த்தால் அவருடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.புனிதமான காதல் கதை சோகத்தில் முடிந்ததை நினைந்து இன்றும் Kate கண்ணீர் விடுவதாக அவருடைய கணவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers