கண்முன்னே பரிதாபமாக பலியான சகோதரன்: சகோதரி எழுதிய உருக்கமான வரிகள்

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் சவாரி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், சகோதரியின் கண்முன்னே பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேத் ட்ரான் ஆண்டர்சன் என்கிற 9 வயது சிறுவன் அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்று வருகிறான்.

புதன்கிழமையன்று மைதானத்தில் சவாரி விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த ஆண்டர்சன், திடீரென மயங்கிய நிலையில் கிடந்துள்ளான்.

இதனையடுத்து வேகமாக மீட்கப்பட்ட ஆண்டர்சன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். அங்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் போதே சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளான்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை அதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், இது ஒரு தற்காலிக விபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டர்சன் தாய் இமெல்டாக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இமெல்டா தனி ஒரு ஆளாக சிரமப்பட்டு 4 குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். தன்னுடைய மகனின் இறுதி சடங்கினை நடத்துவதற்கு கூட பணமில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு நடுவே, நிதி திரட்டி வருகிறார். அதில் உங்களால் முடிந்த பணம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என உதவி கேட்டுள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவருடைய சகோதரி காப்ரியாலா, பிறந்ததிலிருந்தே நீ என் பக்கத்தில் இருந்தாய். நீ மிகவும் அழகானவனாய், சுட்டி பையனாய் இருந்தாய். வளர்ந்து ஒரு ஆணாக வருவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். நீ இப்போது அமைதியாக ஓய்வெடுக்க என்னுடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்