வன்முறை காயங்களுடன் மோசமாக கொல்லப்பட்டிருந்த மாணவி... இந்தியாவில் சுதந்திரமாக சுற்றும் குற்றவாளி

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் மாணவி ஒருவர் மோசமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், அங்கிருந்த தப்பிய குற்றவாளி இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிவாக செய்தி வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 24 வயதான தோயா கோர்டிங்லி என்கிற மாணவி கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் திகதியன்று, கடற்கரையில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார்.

அவரது நிர்வாண உடல் மறுநாள் காலையில் வன்முறை காயங்களுடன் அவருடைய தந்தையால் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு அருகே இருந்த மரத்தில் அவருடைய நாய் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக அவுஸ்திரேலிய பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட ராஜ்வீந்தர் சிங், அதிர்ச்சியூட்டும் வழக்கில் விசாரிக்க விரும்பிய பிரதான சந்தேகநபர் என கூறப்படுகிறது.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட மறுநாளே ராஜ்வீந்தர் சிங் மருத்துவமனையில் தனது முழுநேர வேலையை விட்டுவிட்டு, தனது குடும்பத்தை கைவிட்டு இந்தியா சென்றார்.

அவர் தற்போது ந்தியாவின் தலைநகர் புதுடெல்லிக்கு வடக்கே 450 கி.மீ தூரத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தனது சொந்த ஊரான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசனில் வசித்து வருகிறார்.

ராஜ்வீந்தர் சிங்கை விசாரிக்க இந்திய காவல்துறை, அவுஸ்திரேலியா அதிகாரிகள் அல்லது நிர்வாகத்தின் வேறு எந்த அதிகாரியும் இங்கு வரவில்லை என்று பெயரிடப்படாத நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர் கூரியர் மெயிலிடம் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஹர்சந்தீப் சிங், விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் ராஜ்விந்தரைப் பார்த்தாலும், எந்த உத்தரவும் கோரிக்கையும் இன்றி அவரை கைது செய்ய முடியாது என்று கூறுகிறார்.

எங்கள் காவல் நிலையத்தில் ராஜ்விந்தர் சிங் மீது வழக்கு எதுவும் இல்லை. அவர் உங்களையும் என்னையும் போல சுத்தமாக இருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை இப்போது அவர் இந்த நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்று அவர் சண்டே மெயிலிடம் கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்