கொரோனா பீதி: அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவிற்கு வர இருக்கும் சீன பயணிகள்! போடப்பட்டுள்ள திட்டங்கள்

Report Print Abisha in அவுஸ்திரேலியா

சீனாவில் இருந்து திரும்பிய அவுஸ்திரேலியர்கள் கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கும் பணிகள் துவங்கிவிட்டன.

சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் சீனர்களால் பரவி வருகின்றது.

எனவே ஒவ்வொருநாடும் இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி அவுஸ்திரேலியாவில் இருந்து சீனாவிற்கு சென்று திரும்புபவர்களை அந்நாட்டின் கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த தீவு மொத்தம் 135 சதுரகிலேமீட்டர் பரபரப்பளவு கொண்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய குடியுரிமையுடைய 89குழந்தைகள் உட்பட 243பேர் கிறிஸ்மஸ் தீவிற்கு கொண்டுவரப்பட உள்ளனர். அவர்கள் அனைவரும் இரண்டு வாரங்கள் அங்கு தங்க வைக்கப்பட்டபின் சொத்த இடங்களுக்கு அனுப்பபட உள்ளதாக வெளியுறவுதுறை அமைச்சர் Marise Payne, Canberra-ல் தெரிவித்தார்.

மேலும், சீனாவில் இருந்து அழைத்துவர நாட்டின் முதன்மையான Qantas விமானங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மற்றொரு விமானமும் இந்த வாரத்தில் சீனாவிற்கு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலமைநிர்வாகி Alan Joyce கூறுகையில், அழைத்துவரப்படும் நபர்களுக்கு முகமூடி, பாதுகாப்பு உடை, மற்றும் அவர்கள் ஊழியர்களுடன் பேசுவதை குறைக்கும் அளவிற்கு அந்த பயணம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலில், அந்த விமானம் மேற்கு அவுஸ்திரேலியாவின் லியர்மொந்தில் வரும். அதன்பின் அவர்கள் அனைவரும் மற்றொரு விமானத்தில் மாற்றப்பட்டு கிறிஸ்துமஸ் தீவிற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு, 24மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனையில் இருந்து அனைவரையும் கண்காணிப்பார்கள்.

முன்னதாக அவுஸ்திரேலியாவில் 12பேருக்கு கொனோரா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3பேர் சிட்னி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...