ராட்சத சுறா அருகே சுற்றி வருவதை அறியாமல் கடலில் நீச்சலடித்த நபர்கள்! ஒரு திகில் வீடியோ

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் ராட்சத சுறாக்கள் அருகே உலாவுவதை அறியாமல், பிரம்மாண்ட மீன் திரளுக்கு நடுவே பொதுமக்கள் சிலர் நீச்சலடித்த பகீர் வீடியோ வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கடற்கரையில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

போண்டி கடற்கரையோரம், சால்மன் வகை மீன்கள் மிகப்பெரிய அளவில் திரண்டிருந்த நிலையில், அவற்றுடன் சிலர் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சால்மன் மீன்களை உண்பதற்கான 2 ராட்சத சுறாக்களும் அந்த பகுதியில் உலாவியதை ட்ரோன் கமெரா படம் பிடித்துள்ளது.

இது தொடர்பான திக் திக் வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டில் நடப்பாண்டில் மட்டும் அதிகாரபூர்வமாக 21 சுறா தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்