உங்கள் உதடு பார்ப்பதற்கு கருப்பாக உள்ளதா? சிவப்பாக்க இதோ சில வழிகள்

Report Print Jayapradha in அழகு

ஒருவரின் அழகை அதிகமாக வெளிக்காட்டுவதில் அவர்களின் உதட்டுக்கு முக்கிய பங்குள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் இயற்கையோகவே சிகப்பு நிற உதடு இருப்பவர்களை பார்ப்பது அரிது.

இதனால் தான் பெண்கள் தங்களின் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள்.

எனவே உதடுகளின் சிவப்பு நிறத்தின் அழகை இயற்கையாகவே அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

கருப்பான உதட்டின் நிறத்தை சிவப்பாக மாற்றுவது எப்படி?
எலுமிச்சை

தினமும் இரவில் படுப்பதற்கும் முன்பு எலுமிச்சை சாற்றில், சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை ஜெல்லை

கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் முன் உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் சூடான நீரில் கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி, உதடுகளுக்கு அழகான சிவப்பு நிறம் கிடைக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட்டை துண்டாக நறுக்கி அந்த பீட்ரூட் துண்டுகளை எடுத்து உதடுகள் மீது 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்தால், உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும்.

தேன்

பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.

ரோஜாப்பூ

ரோஜாப்பூவின் இதழை அரைத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, குளிர வைத்து, பின் அதனை தினமும் உதட்டிற்கு தடவி வந்தால் இது உதட்டிற்கு லிப்-பாம் போன்று இருப்பதோடு, நல்ல தீர்வையும் தரும்.

சர்க்கரை

சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கியும், தேன் ஈரப்பசையையும் கொடுக்கும்.

வெண்ணெய்

கருமையான உதடுகள் இருப்பதற்கு வறட்சியும் ஒரு காரணம். வறட்சியைப் போக்குவதற்கு உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால் உடனே உதட்டின் வறட்சி நீங்கி, நிறம் மாறுவதைக் காணலாம்.

மாதுளை

மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால் உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.மேலும் இதனை தினமும் செய்வதால் உதடு மிகவும் சிப்பாக மாற பெரிதும் உதவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers