முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியுதா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க..

Report Print Kavitha in அழகு

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும்.

வறண்ட சருமம், மென்மையான சருமம், மற்றும் எண்ணெய் பசை சருமம என அமைப்புகள் உண்டு.

அவற்றில் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.

ஏனென்றால், இந்த சருமத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது அதிகப்படியான பருக்கள் ஏற்படுவது மற்றும் சரும வறட்சி ஏற்படுவதும் தான்.

எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

அந்தவகையில் எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய சில அழகு குறிப்புக்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

pinterest
  • முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
  • முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும்.
  • தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும்.
  • முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.
  • காலை எழுந்ததும் வெள்ளரி காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை விலகி முகம் பொலிவு பெரும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்