டொலர், பவுண்டுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

Report Print Vethu Vethu in வர்த்தகம்

இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த ஆறு மாதங்களில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்தாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து கடந்த ஐந்தாம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் நூற்றுக்கு 1.8 வீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியுடன் இலங்கை ரூபாயை ஒப்பிடும் போது யூரோவுக்கு எதிராக நூற்றுக்கு 8.1 வீதத்திலும் ஸ்ட்ரேலிங் பவுண்டுக்கு எதிராக நூற்றுக்கு 6.2 வீதத்திலும் ஜப்பான் யென்னிற்கு எதிராக நூற்றுக்கு 6.7 வீதத்திலும், கனேடிய டொலருக்கு எதிராக நூற்றுக்கு 1.6 வீத்திலும் அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக நூற்றுக்கு 4.6 வீதத்திலும் இந்திய ரூபாய்க்கு எதிராக நூற்றுக்கு 6.8 வீதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய இந்த தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...