வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகைளை வழங்கும் Home store Gallery

Report Print Amirah in வர்த்தகம்

தமது இல்லங்களுக்கு கூடுதல் அழகைச் சேர்ப்பிக்க விரும்புகின்ற வாடிக்கையாளர்களுக்காக வேண்டி Home store Gallery ஒரு அற்புதமான, பிரத்தியேகமாக அடக்கமான காட்சியறையாக திகழ்ந்து வருகின்றது.

தலைமைத் தொழிற்பாட்டு அதிகாரியான அட்னான் இக்பால் அவர்களின் நிர்வாகத்தின் கீழ், அவரது எண்ணக்கருவின் வெளிப்பாடாக ஜேர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட, சுவர் அலங்காரத் தாள்களை விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் இன்னும் அதிகமான வீட்டு அலங்காரத் தெரிவுகளை வழங்கும் வகையில் Home store Gallery அண்மையில் தனது உற்பத்தி வரிசையை விரிவுபடுத்தியிருந்தது.

மேசை விரிப்பு லினென்துணி, மேசை விரிப்புத் துணி, கை துடைக்கும் துணிகள், குஷன் உறைகள், படுக்கை விரிப்புக்கள் மற்றும் கம்பளியிலான மெத்தை உறைகள், துவாய்கள், குளியலறை உபயோக பொருட்கள், கழிவகற்றல் கூடைகள், கண்ணாடியிலான தண்ணீர் போத்தல்கள், வாசனைத் திரவியங்களை அடுக்கி வைக்கும் சிறு இராக்கைகள், உணவை வைத்துப் பேணும் மேசன் ஜாடிகள், கண்ணாடிப் பெட்டிகள், வெட்டுக்கருவிகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் தளபாடங்கள் என பல்வேறு உற்பத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான உற்பத்திகளுக்கென Mommy's Designer Boutique என்ற பெயரில் தனியான ஒரு பிரிவையும் இக்காட்சியறை கொண்டுள்ளதுடன், குழந்தைகளுக்கான ஆடைகள், கம்பளிகள், விரிப்புக்கள் மற்றும் தலையறை உறைகள் அடங்கலாக தொட்டில் விரிப்புக்கள் போன்ற உற்பத்திகளைக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தமது விருப்பத்திற்குரிய வடிவமைப்பிற்கேற்ப அவற்றை பிரத்தியேகமாக வடிவமைத்தும் இந்த உற்பத்திகளை கொள்வனவு செய்யும் Home store Gallery இல் நவீன வடிவ, நவநாகரிக தோற்றம் கொண்ட ஏராளமான உற்பத்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமல்லாது, ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மிகச் சிறந்த தரத்திலான வர்த்தகநாம அடையாளத்தின் கீழ், சுவர் அலங்காரத் தாள்களையும் இக்காட்சியறை கொண்டுள்ளது.

ஆடம்பரமான மற்றும் புதுப்பாணி கொண்ட வீட்டுப் பாவனைப் பொருட்களை Home store Gallery இல் நியாயமான விலைகளில் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

நியாயமான விலை கொண்ட வீட்டு பொருத்துக்கள் மற்றும் அலங்காரத் தளபாடங்களை வாங்கி தாம் பொறுப்பெடுத்த செயற்திட்டங்களை பூர்த்தி செய்ய விரும்புகின்ற வீட்டு உட்புற வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் போன்றோருக்கு மிகவும் உகந்த ஒரு இடமாக இக்காட்சியறை வளர்ச்சி கண்டு வருகின்றது.

ஒவ்வொரு வாரத்திலும், குறித்த தினமொன்றில், தெரிவுசெய்யப்பட்ட உற்பத்திகளுக்கு ஊக்குவிப்பு சலுகைகளையும் Home store Gallery அறிமுகப்படுத்தியுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் காட்சியறையில் விசேட சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தெரிவுசெய்யப்பட்ட உற்பத்திகளுக்கு '2 வாங்கினால் 1 இலவசம்' என்ற சலுகையுடன், பருவகாலம் முழுவதும் கிடைக்கப்பெறுகின்ற ஊக்குவிப்பு சலுகைகளையும் அனுபவிக்க முடியும். உயர் தரத்திலான வீட்டுப் பாவனைப் பொருட்களை எதிர்பார்க்கின்ற எவரும் Home store Gallery பெறுமதிமிக்கவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments