அங்கீகாரம் அற்ற பண வியாபாரம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை எடுத்தது பேஸ்புக்

Report Print Givitharan Givitharan in வர்த்தகம்
62Shares
62Shares
ibctamil.com

அண்மைக் காலமாக அங்கீகாரம் வழங்கப்படாத சில டிஜிட்டல் பணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்லைன் வியாபாரம் சூடுபிடித்து வருகின்றது.

எனினும் இதற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் காணப்படுகின்ற அதேவேளை சில நாடுகள் இதனை தடைசெய்துள்ளன.

இந்நிலையில் பிட்கொயின் உட்பட ஏனைய அங்கீகாரம் பெறப்படாத நாணயங்கள் தொடர்பில் மு்றகொள்ளப்படும் விளம்பரங்களுக்கு பேஸ்புக் நிறுவனமும் தடை விதித்துள்ளது.

தவறான விளம்பரங்கள் ஊடாக தனது பயனர்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே இந் நடவடிக்கையில் பேஸ்புக் இறங்கியுள்ளது.

மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக அங்கீகாரம் வழங்கப்படாத டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகளை தவிர்க்க முடியும் எனவும் நம்பப்படுகின்றது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்