இந்தியாவில் தங்கம் விலை அசுர வேகத்தில் உயர்வு! ரூ.30 ஆயிரத்தை நெருங்கியது

Report Print Kavitha in வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாகவே சரிந்து வருவதால் உலக சந்தையில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரித்து வருவதன் காரணமாக இந்தியாவில் தங்க விலை அசுர வேகத்தில் உயர்ந்த வண்ணமே உள்ளது.

கடந்த 4 வாரங்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 336 அதிகரித்து இருக்கிறது தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை நெருங்கி மக்களுக்கு பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,816-க்கு விற்பனையாகிறது.

இதன்படி தங்கம் விலையில் இன்று ரூ.112 அதிகரித்து ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 816 க்கும் கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 727 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.26 ஆயிரத்து 480 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நிபுணர்கள் இம்மாத 3-வது வாரத்தில் தங்கம் விலை ரூ. 29 ஆயிரத்தை தாண்டியதால் ரூ.30 ஆயிரத்தை தங்கம் விலையை தொடும் என்று தெரிவித்தனர்.

மேலும் வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.52 ஆயிரத்து 200 ஆக உள்ளது எனவும் ஒரு கிராம் ரூ.52.20க்கு விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்