கனடா சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜக்மீட் சிங் விலகல்: காரணம் என்ன?

Report Print Thayalan Thayalan in கனடா

புதிய ஜனநாயக கட்சியின் தேசிய மட்ட தலைவராக அண்மையில் தேர்வுசெய்யப்பட்ட ஜக்மீட் சிங், ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத்தில் வகித்துவந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

38வயதான ஜக்மீட் சிங் புதிய ஜனநாயக கட்சியின் தேசிய மட்ட தலைவராக கடமையாற்றுவதை முழுநேரமாக முன்னெடுக்கவுள்ளதால் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவர் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எதனையும் வகிக்காத போதிலும் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள தேர்தலில் நாடாளுமன்ற பதவியை பெற்றுக்கொள்வதற்காக முயற்சிகள் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜக்மீட் சிங், பிரமேலியா கோஃரி மால்டன் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த 2011ஆண்டு முதல் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்