கனடா பிரிட்டிஷ் கொலம்பிய நகர்களில் பெரும்பான்மையாக மாறிய சிறுபான்மையினர்

Report Print Thayalan Thayalan in கனடா
கனடா பிரிட்டிஷ் கொலம்பிய நகர்களில் பெரும்பான்மையாக மாறிய சிறுபான்மையினர்

பழங்குடி அல்லாத ‘விசிபல் மைனோரிட்டி’ என கனேடிய அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்கள் தற்போது கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மை வகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றையடுத்து வெளியிடப்பட்ட புள்ளிவிபர அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பர்னபி, சர்ரே, வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தை உள்ளடக்கிய தேர்தல் தொகுதி என்பவற்றில் பழங்குடி அல்லாத சிறுபான்மையினர் பெரும்பான்யாக இருந்து வருகின்றனர்.

இதேவேளை, கோகுவிட்லாம் நகரில் காணக்கூடிய சிறுபான்மையினர் விகிதம் 2016ஆம் ஆண்டில் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இது 2011ஆம் ஆண்டின் பின்னல் 44 வீதத்தால் அதிகரித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்