அமெரிக்காவில் புகலிடம் மறுப்பு: கனடாவை நோக்கிப் படையெடுக்கும் மக்கள்

Report Print Gokulan Gokulan in கனடா
305Shares
305Shares
ibctamil.com

அமெரிக்காவில் வசிக்கும் 2 லட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை டிரம்ப் நிர்வாகம் வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவர்களது கவனம் கனடாவை நோக்கித் திரும்பியுள்ளது.

இதற்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹெய்டி நாட்டவர்கள் கனடாவிற்குப் படையெடுத்ததைத் தொடர்ந்து இப்போது எல் சல்வடோர் நாட்டவர்களும் கனடாவை நோக்கித் திரும்பியுள்ளனர்.

புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் எல் சல்வடோர் நாட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. IRBயின் புள்ளிவிவரப்படி 2016இல் 244 ஆக இருந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2017இல் 564ஆக உயர்ந்துள்ளது.

இன்னொரு பக்கம், அமெரிக்காவால் தற்காலிக அடைக்கல அந்தஸ்து ரத்து செய்யப்பட்டவர்களுக்காக சிறப்புத் திட்டங்களை கனடா ஏற்படுத்தியுள்ளதாக தவறான கருத்து பரவியதை அடுத்து சிலர் கனடாவின் வடக்குப் பகுதியை மொய்த்தனர்.

எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததோடு, கனடா அரசு அமெரிக்காவிற்கே சென்று, கனடா நோக்கி வரும் மக்களைத் தடுப்பதற்காக பிரச்சாரங்களை மேற்கொண்டது.

Spanish மற்றும் Creole மொழி பேசும் MPக்களும் குடியேற்றத்துறை அமைச்சரும் தூதரக அலுவலர்களும் பல இடங்களுக்குச் சென்று கனடா நாட்டு புகலிடம்பெறுதல் தொடர்பான சட்டங்களைப்பற்றி பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள்.

இருந்தபோதிலும் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை, கடந்த நவம்பர் மாதத்தில் Nicaraguaவின் consul general, Miami யில் அமெரிக்காவால் தற்காலிக அடைக்கல அந்தஸ்து ரத்து செய்யப்பட்டவர்களுக்கு கனடா புகலிடம் அளிப்பதாக உள்ளூர் ஊடகங்களுக்கு செய்தியளித்தார்.

இதற்கிடையில் திருட்டுத்தனமாக கனடாவில் நுழைவது எப்படி என்று இணையத்தை ஆராய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவர்கள் மீதும் கவனம் செலுத்துவதாகத் தெரிவிக்கும் குடியேற்றத்துறை அமைச்சரின் செய்திதொடர்பாளர் Hursh Jawal, உலகெங்கிலும் போர், பயங்கரவாதம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் நமது கடமையை மதிக்கும் அதே நேரத்தில் அரசின் அனைத்து நிலைகளும் தொடர்ந்து கனடியர்களைப் பாதுகாப்பதற்கும் புலம்பெயர்தலை ஒழுங்குபடுத்தவதற்கும் உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்