கனேடிய பிரதமருக்கான பாதுகாப்பில் சமரசமில்லை: அமைச்சர் விளக்கம்

Report Print Balamanuvelan in கனடா
96Shares
96Shares
ibctamil.com

கனடாவிலுள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையானவை என்றும் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிக்குகூட விருந்தினர்களின் பட்டியலைப் பார்க்க அனுமதியளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கனடா பிரதமரின் இந்தியப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெருமிதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“கனடா பிரதமரின் இந்தியப் பயணத்தின்போது நமது பொலிசும் பாதுகாப்பு ஏஜன்சிகளும் மிகச்சிறப்பாகப் பணியாற்றினார்கள் என்பதை கனடா நாட்டவர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகிறோம்” என்று கனடாவின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் Ralph Goodale நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது தெரிவித்தார்.

காலிஸ்தான் தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய Jaspal Atwal என்பவருக்கு, இந்தியாவுக்கான கனடா High Commissioner Nadir Patel கனடா பிரதமருக்கு அளித்த விருந்தில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த அழைப்பு ரத்து செய்யப்பட்டது.

கனடா பிரதமரின் மனைவி, தீவிரவாதி Jaspal Atwalஉடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் பிரதமர் தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் விதத்தில் கனடா பிரதமரின் இந்திய விருந்திற்கு Jaspal Atwal அழைக்கப்பட்டதற்கு கனடா MP Randeep S. Sarai பழியை தன் மீது போட்டுக்கொண்டார்.

இந்த Jaspal Atwal, 1986 ஆம் ஆண்டு Vancouver Islandஇல் வைத்து பஞ்சாப் அமைச்சரான Malkiat Singh Sidhuவை கொலை செய்ய முயற்சித்தாக தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்