தாயக மக்களுக்கு கனடாவில் கிடைத்த அங்கீகாரம்

Report Print Nivetha in கனடா

வடக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் கழிவுப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்களுக்கு கனடாவில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழம் பரிசுகள் நிறுவனம் குறித்த பொருள்களை கனடாவில் சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.

முன்னாள் போராளிகளுக்கு பொருளாதார ஊக்குவிப்பை வழங்கும் முகமாக ஈழம் பரிசுகள் நிறுவனம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை, கனடாவில் இதனைப் பலர் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்