பெண்களை குறிவைத்து தாக்குதலா? கனடா தாக்குதல்தாரி குறித்து வெளியான பரபரப்பு தகவல்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் டொரான்டோ பகுதியில் பரபரப்பான சாலையில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோதவிட்டு கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியவர் தொடர்பில் பரபரப்பன தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் பரபரப்பான சாலையில் பாதசாரிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்ட நபர், குறித்த சம்பவத்திற்கு சில நிமிடங்கள் முன்பு அமெரிக்க பயங்கரவாதி தொடர்பில் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டது தெரிய வந்துள்ளது.

அதில் அமெரிக்க பயங்கரவாதியை பாராட்டியுள்ளதுடன், அவரது கடமையை அவர் செய்துள்ளதாகவும், அதில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது Elliott Rodger என்பவரையை கனேடிய தாக்குதல்தாரி பாராட்டியுள்ளார்.

இவர் கலிபோர்னியாவில் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

குறித்த சம்பவத்தை அடுத்து பொலிசார் சுற்றி வளைக்கயில், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கோண்டு தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த நபர் பெண்கள் மீது வெறுப்பு கொண்டு அந்த தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது. மட்டுமின்றி அவர் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத குழுவில் உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார்.

மேலும் அவரது பேஸ்புக பக்கத்தில் பெண்களுக்கு எதிரான பல கருத்துகளையும் அவர் பதிவு செய்திருந்தார்.

கனடாவில் தாக்குதல் நடத்திய Alek Minassian(25) சம்பவத்தன்று முக்கியமாக பெண்களை குறிவைத்தே அந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வாகன தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Alek Minassian மீது கொலைக்குற்றம் தொடர்பில் 10 பிரிவுகளிலும், திட்டமிட்ட கொலை முயற்சி தொடர்பில் 13 பிரிவுகளிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers