காதலன் விட்டுப்பிரியாமல் இருக்க இளம்பெண் செய்த செயல்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் இளைஞரின் எதிர்காலத்தையும் அவரது தொழில் வாய்ப்பையும் சிதைத்த இளம்பெண்ணுக்கு 350,000 டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கனடாவில் வளர்ந்துவரும் இசைக்கலைஞர் Eric Abramovitz. இவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில் வாய்ப்பை அப்போதைய காதலி சிதைத்துவிட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கிலேயே நீதிமன்றம் குறித்த இழப்பீடு தொகையை அறிவித்துள்ளது.

கனடாவின் மாண்ட்ரீல் பகுதியில் செயல்பட்டுவரும் Schulich இசை பாடசாலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இசைக் கலைஞர் Eric Abramovitz பயின்று வந்துள்ளார்.

அப்போது Jennifer Lee என்ற இளம்பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் இருவரும் ஒரே குடியிருப்பில் வாழ்ந்து வந்ததுடன், இவரது மடிக்கணினியை பயன்படுத்தும் அனுமதியும் அவருக்கு வழங்கியுள்ளார்.

கனடாவில் பல விருதுகளை குவித்துள்ள Abramovitz அமெரிக்காவில் உள்ள பிரபல இசை பாடசாலையான Coburn Conservatory of Music-ல் சேர்ந்து படிப்பதற்காக 2013 டிசம்பர் மாதம் விண்ணப்பித்துள்ளார்.

குறித்த பாடசாலையானது பிரபல இசைக்கலைஞர் Yehuda Gilad என்பவரின் கீழ் செயல்படுவதாகும். மட்டுமின்றி ஆண்டுக்கு இருவருக்கு மட்டுமே Yehuda Gilad வாய்ப்பளித்தும் வந்துள்ளார்.

பல கட்ட தேர்வுகளுக்கு முடிவில் Abramovitz-கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குறித்த பாடசாலையானது Abramovitz-கு மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

ஊக்கத்தொகையுடன் கூடிய 2 ஆண்டுகள் படிப்புக்கு Abramovitz தெரிவாகியுள்ளதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த மின்னஞ்சலானது ஜெனிபர் லீயின் சூழ்ச்சியால் இவரது பார்வைக்கு படவே இல்லை என விசாரணையில் தெரிய வந்தது.

தமது காதலன் நீண்ட 2 ஆண்டுகள் தம்மை விட்டு பிரிந்து செல்வதில் துளியும் விரும்பாத ஜெனிபர் லீ அந்த மின்னஞ்சலை அழித்ததுடன், போலியான ஒரு மின்னஞ்சலை தயார் செய்து, வாய்ப்பு மறுக்கப்பட்டதாக Abramovitz-கு ஜெனிபர் லீ அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் ஜெனிபர் லீ உடனான காதல் முறிவுக்கு பின்னர் ஓராண்டு கடந்த பின்னர் Yehuda Gilad என்பவரை ஒருமுறை சந்திக்க நேர்ந்த Abramovitz நடந்தவற்றை அவரிடம் தெரிவித்துள்ளார்.

Yehuda Gilad அளித்த பதில் அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெனிபர் லீ மீது வழக்கு தொடுத்துள்ளார் Abramovitz.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் திட்டமிட்டே ஒரு கலைஞரின் எதிர்காலத்தை சிதைத்த குற்றத்திற்காக ஜெனிபர் லீ-கு 350,000 டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்