கனடாவில் தவறான எண்ணுக்கு இறுதிச்சடங்கு தகவலை அனுப்பிய பெண்: பின்னர் நடந்த சம்பவம்

Report Print Arbin Arbin in கனடா
297Shares
297Shares
ibctamil.com

கனடாவில் இறுதிச்சடங்கு தகவலை தவறான எண்ணுக்கு அனுப்பிய பெண்ணுக்கு நெகிழ வைக்கும் பதில் கிடைத்துள்ளது.

கனேடியரான Dawn Burke என்ற பெண்மணி தமது மருமகனான க்வென்டின் என்பவரது மொபைலில் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இரண்டு குறுந்தகவலை அனுப்பிய அவர், முதலில் க்வென்டின் தானா என வினவியுள்ளார். பதில் ஆம் என வந்ததும், வெள்ளியன்று நடக்கவிருக்கும் இறுதிச்சடங்கு நிகழ்வு குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், குறித்த தகவலை பார்த்த அந்த நபருக்கு, தாம் செய்வது தவறாக பட்டுள்ளது. உடனடியாக தாம் க்வென்டின் இல்லை எனவும், மன்னிக்க வேண்டும் எனவும் அடுத்த குறுந்தகவலை அனுப்பியுள்ளார்.

மட்டுமின்றி, தகவல் அறிந்த நிலையில் தாமும் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கிறேன், உங்களுக்கு சம்மதமா எனவும் கேட்டுள்ளார்.

இதைப் பார்த்த Dawn Burke மிக மகிழ்ச்சியுடன், ஆம் என பதிலளித்துள்ளார். உண்மையில் Dawn Burke தமது மருமகன் என கருதி தகவல் அனுப்பியது லீனா அலி என்ற பல்கலைக்கழக மாணவியின் மொபைல் எண்ணுக்கு என்பது பின்னர் தெரியவந்தது.

லீனா அலி ஒப்புக்கொண்டது போன்றே வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதுடன், தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பங்கிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்