விமானநிலையத்தில் சிக்கி தவித்த அகதிக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஆனால் அவர் எடுத்த முடிவு என்ன தெரியுமா?

Report Print Santhan in கனடா

சிரியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் மலேசியா விமானநிலையத்தில் தங்கி வந்த வேளையில் அவருக்கு பல நாடுகளில் அகதியாக ஏற்றுக் கொள்ளவதாக கூறினாலும், கனடாவிற்கு தான் செல்வேன் என்று அடம் பிடித்தத்தால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரியாவைச் சேர்ந்தவர் Hassan al-Kontar. கடந்த 2006-ஆம் ஆண்டு UAE சென்ற இவர் அங்கு மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது 2011-ஆம் ஆண்டு சிரியாவில் போர் வந்ததால், இவரை அந்நாட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

இவர் அங்கு செல்ல மறுத்ததன் காரணமாக சிரிய தூதரகம் இவருடைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்துவிட்டதால், தன்னுடைய வேலைக்கான உரிமை மற்றும் வேலையை இழந்துள்ளார்.

பாஸ்போர்ட் புதுப்பிக்காவிட்டாலும், சுமார் 6 ஆண்டுகள் அங்கு சட்டவிரோதமாக தங்கிய அவரை அதிகாரிகள் பிடித்துள்ளனர். அதன் பின் மூன்று மாத வேலை விசா மூலம் மலேசியாவுக்கு வந்துள்ளார்.

மலேசியாவிற்கு வந்த இவர் மூன்று மாதம் நிறைவடையும் தருவாயில் அங்கிருந்து Ecuador-க்கு செல்ல முயன்றுள்ளார். ஆனால் விமானத்தில் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து Cambodia-விற்கு சென்றுள்ளார். ஏனெனில் அந்த நாட்டில் அங்கு சென்று கூட விசா பெற்று கொள்ளலாம். அங்கு சென்ற அவருக்கும் விசா கொடுக்க மறுக்கப்பட்டதால், மீண்டும் மலேசியாவிற்கே வந்துள்ளார்.

மலேசியா வந்த இவருக்கு மூன்று மாதங்கள் நிறைவடைந்ததால், தற்போது மலேசியா நாட்டின் உள்ளேவும் செல்ல முடியாமல், வெளிநாட்டிற்கும் செல்ல முடியாமல், பல மாதங்களாக மலேசியா Kuala Lumpur சர்வதேச விமானநிலையத்திலே தங்கி வந்தார்.

அவருடைய சாப்பிட்டிற்கு அவருடைய ஊழியரகள் உதவியுள்ளனர். அதன் பின் நான் எங்கும் செல்ல முடியாமல் தவிப்பதாக வீடியோ ஒன்றை இவர் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானதால், இவரை அகதியாக ஏற்றுக் கொள்ள பல நாடுகள் முன் வந்தன.

ஆனால் இவரோ நான் சென்றால் கனடாவிற்கு தான் செல்வேன் என்று கூறியுள்ளார். அதற்கான விண்ணப்பபடிவத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் அது எல்லாம் முடிவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும்.

அதுவரை இவரை விமானநிலையத்திலே வைத்திருக்க முடியாது என்பதால், விமானநிலைய அதிகாரிகள் தற்போதைய நிலைமைக்கு உங்களை சில நாடுகள் அகதியாக ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளது. நீங்கள் இப்போதைக்கு அங்கு செல்லுங்கள், இரண்டு வருடங்களுக்கு பின் கனடா செல்லலாம் என்று கூறியுள்ளனர்.

அதற்கு அவர் மறுத்ததால், உடனடியாக அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் எப்படியும், Hassan al-Kontar சிரியாவிற்கு தான் திருப்பி அனுப்பப்படுவார் என்று கூறப்படுகிறது.

அவர் சிரியாவில் போர் நடக்கிறது, எனக்கு பயமாக இருக்கிறது. நான் போகமாட்டேன் என்று மறுத்து வருகிறார். அகதிகள் பலரும் மற்றொரு நாட்டில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், இவர் தனக்கு கிடைத்த இதை பயன்படுத்தி கொள்ளாமல், கனடாவிற்கு தான் செல்வேன் என்று அடம்பிடித்திருப்பது என்ன காரணம் என்பது தெரியவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers