குழந்தையற்றோருக்கான மருத்துவமனை நடத்திய மருத்துவர்: தானே ஏராளமான குழந்தைகளுக்கு தந்தையான செய்தி

Report Print Balamanuvelan in கனடா

ஒட்டாவாவைச் சேர்ந்த ஒரு குழந்தையில்லாத தம்பதியினர், பிரபல மருத்துவர் ஒருவரின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

சிகிச்சைக்குப் பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததால் மகிழ்ச்சியுடன் அவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், செய்தித்தாளில் ஒரு செய்தியைப் படித்த அந்த தம்பதிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அது அவர்கள் எந்த மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றார்களோ, அதே மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்ற இரண்டு பெண்கள், தவறான உயிரணுவைப் பயன்படுத்தி கர்ப்பமுற்றதாக தெரிய வந்ததையடுத்து நீதிமன்றம் சென்றுள்ளதாக அந்த செய்தி கூறியது.

சில ஆண்டுகளுக்குப்பின், Bernard Norman Barwin என்ற அவர்களது மருத்துவரின் பெயர் மீண்டும் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் வந்தது.

தனது மருத்துவமனைக்கு வந்த பலருக்கு தனது உயிரணுவையே பயன்படுத்தி கர்ப்பமுறச் செய்ததாக செய்திகள் வெளியாக, பலர் அவர்மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த செய்திகளைக் கேட்டதும் தங்களுக்கும் சந்தேகம் வலுக்க, இந்த தம்பதியரும், தாங்களும் DNA பரிசோதனைகள் மேற்கொள்ள, அவர்கள் பயந்த விடயம் நடந்தேவிட்டது.

ஆம், அவர்கள் குழந்தைக்கு தந்தை, வேறு யாரோ ஒருவர் என்று கூறின பரிசோதனை முடிவுகள்.

மிகவும் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், பின்னர் தங்கள் குழந்தைகளிடம் உண்மையைக் கூற, மகள் ஏற்றுக் கொண்டாலும், அவர்களது மகனால், தான் தன் தந்தைக்கு பிறக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவேயில்லை.

பெரும் போராட்டத்திற்கு பிறகு, யாருடைய உயிரணு பயன்படுத்தப்பட்டது என்பதை கண்டறிந்த தம்பதியர் அந்த நபரையும் சந்தித்தனர்.

அவருக்கும் அதிர்ச்சி, தான் தானமளித்தாலும் கூட, தம்பதியரின் அனுமதியின்றி ஏமாற்றி தனது உயிரணுவை பயன்படுத்தியதை அறிந்து அவரும் கோபமடைந்தார்.

தற்போது கனடாவின் உயிரணு தானம் தொடர்பான சட்டங்களில் மாற்றம் தேவை எனக்கோரும் அந்த தம்பதியருடன் இணைந்து, உயிரணு தானம் செய்த அந்த நபரும், உயிரணு அல்லது அண்டதானம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கள் உண்மையான பெற்றோரை அறியும் உரிமை வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers