மனைவிக்கு குடிக்க அமிலம் கொடுத்த கணவன்: மறுவாழ்வு அளித்த கனடா

Report Print Balamanuvelan in கனடா

கைப்பிடித்தவளைக் கட்டிக் காக்க வேண்டிய கணவன் ஒருவன் அவளைக் கொல்வதற்காக அவளுக்கு அமிலத்தைக் குடிக்கக் கொடுத்த நிலையில், கனடா மருத்துவர்கள் அவளுக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார்கள்.

பங்களாதேஷைச் சேர்ந்த Popi Rani Das (30) என்ற பெண்ணின் கணவன் அவரைக் கொன்று விட்டால், அதிக வரதட்சணையுடன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆசையில் மனைவியை ஏமாற்றி கொலை செய்வதற்காக அமிலத்தைக் குடிக்க கொடுத்துள்ளான்.

அவன் கைது செய்யப்பட்டாலும் பின்னர் ஜாமீனில் வெளிவந்துவிட்டான்.

இந்நிலையில் தொண்டையும் குடலும் கருகிய நிலையில் சிறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் Popi.

சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ இயலாத அவருக்கு ஒரு குழாய் வழியாக திரவ ஆகாரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு வந்தது.

அப்போது பங்களாதேஷுக்கு வந்திருந்த Dr. Toni Zhong என்னும் பிளாஸ்டிக் சர்ஜனை சந்திக்கும் வாய்ப்பு Popiக்கு கிடைத்தது.

Popiயைக் கண்டு இரக்கப்பட்ட Dr. Toni, அவர் கனடா வந்தால் அங்குள்ள மருத்துவர்கள் அவரை குணமாக்க வாய்ப்பிருப்பதாகக் கூற, கனடா வந்தனர் Popiயும் அவரது தாயும்.

Popiயின் தோலை எடுத்து அவரது குடல் மற்றும் தொண்டைப்பகுதிகளில் வைத்து தைத்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, Popi தானே உணவருந்தும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர் கனடா மருத்துவர்கள்.

பங்களாதேஷில் தன்னைக் கொல்ல தனது கணவன் காத்திருக்கும் நிலையில், தனக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்களுக்கும் கனடாவுக்கும் நன்றி கூறும் Popi, தான் கனடாவிலேயே வாழ விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.

அவரும் அவரது தாயாரும் கனடாவில் முறைப்படி புலம்பெயர்ந்தோர் என்னும் நிலைமையை பெறுவதற்காக முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers