மகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபர்: தந்தை எடுத்த துணிகர முடிவு!

Report Print Balamanuvelan in கனடா

தனது மகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபரின் மோசமான நோக்கத்தை அறிந்த தந்தை, அவன் உடலில் ஆறு குண்டுகளை பாய்ச்சினார்.

கனடாவின் Louisvilleயில் வசிக்கும் Ali Braceyயின் மகள் தனது படுக்கையறையில் படுத்திருக்கும்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் Donald Oliver (38) என்ற நபர் படுக்கையறைக்குள் ஜன்னல் வழியாக திருட்டுத்தனமாக நுழைந்திருக்கிறார்.

அவரைக் கண்டதும் அந்த பெண், லைட்டை அணைத்து விட்டு, போர்வையால் இழுத்து மூடிக் கொண்டு, தனது செல் போனை எடுத்து அம்மாவுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறாள்.

Oliver அங்கிருந்து நகரவும் அந்த பெண் அங்கிருந்து தப்பி வெளியே ஓடியிருக்கிறாள்.

உடை களைந்து உள்ளாடை மட்டும் அணிந்திருந்த Oliver, அவளைத் தேடிக்கொண்டு படுக்கையறையிலிருந்து சமையலறைக்குள் சென்றிருக்கிறார்.

அங்கு வந்த Bracey, Oliverஐப் பார்த்து வீட்டை விட்டு வெளியே போகும்படி கத்தியிருக்கிறார்.

ஆனால் Oliver தான் வந்த நோக்கம் நிறைவேறாமல் போக முடியாது என்பது போல், Braceyயைப் பார்த்து மிருகம்போல் உறுமியிருக்கிறார்.

இருவருக்கும் கைகலப்பாக, Braceyயைவிட Oliver உடல் அளவில் பெரியவராக இருந்ததால், உதவி கோரி Bracey சத்தமிட்டிருகிறார்.

சத்தம் கேட்டு Braceyயின் மனைவி தங்கள் வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து தன் கணவரிடம் கொடுத்திருக்கிறார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவரான Oliver மீது துப்பாக்கியால் ஆறு முறை சுட்டிருக்கிறார் Bracey.

பின்னர் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட, அவர்கள் வந்து Oliverஐக் கைது செய்திருக்கிறார்கள்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவன் மீது, கொள்ளையடிக்கும் நோக்கில் வீடு புகுந்தது, தாக்குதல் நடத்தியது மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Oliver குடும்பத்தாரை தவிர அயலகத்தார் அனைவரும் துணிந்து செயல்பட்டு தன் மகளைக் காப்பாற்றிய Braceyயைப் பாராட்டியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers