கனடாவில் வாழ்வை தொடங்கும் ஆசையில் வந்த இந்திய குடும்பம்: நீச்சல் குளத்தில் வாழ்விழந்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் வாழ்க்கையைத் தொடங்கும் ஆசையில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் இருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழக்க, ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, மீதமிருக்கும் ஒருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்.

சுமார் ஓராண்டுக்கும் முன் இந்தியாவிலிருந்து கனடா வந்தவர் Ram Nivash Misra(38). சில மாதங்களுக்கு முன், அவரது மனைவியும் மகன்கள் Shreyaan மற்றும் Aaram ஆகியோரும் கனடா வந்து Ram உடன் இணைந்து கொண்டனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வின்னிபெக்கிலுள்ள தங்கள் அடுக்கு மாடிக்குடியிருப்பில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் Ram, Shreyaan மற்றும் Aaram ஆகியோர் பேச்சு மூச்சற்றுக் கிடந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தவர்கள் அவசர உதவியை அழைக்க, மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிகிச்சை பலனின்றி திங்களன்று Ram மருத்துவமனையில் உயிரிழக்க, நேற்று அவரது மகன் Aaram உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

Ramஇன் மூத்த மகன் Shreyaan மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் Ram மட்டுமே வேலை பார்த்து குடும்பத்திற்கான வருவாயை ஈட்டியவர் என்பதாலும், அவரும் மகனும் இறந்து போனதாலும் அதிர்ச்சியில் இருக்கும் Ramஇன் மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கனடா வருவோர் முறையான நீச்சல் பயிற்சி இன்றி நீச்சல் குளங்களில் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி வருவதாக தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்