கனடாவில் இந்திய படம் திரையிடப்பட்ட தியேட்டர்களை குறிவைத்து கலாட்டா செய்த நபர்: பின்னணியில் இருப்பது யார்?

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் இந்திய திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்ட இரண்டு தியேட்டர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கனடாவின் ஒன்ராறியோவில் பிரபல இந்திய நடிகர்களான சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் முதலானோர் நடித்துள்ள சை ரா நரசிம்ம ரெட்டி என்ற படம் திரையிடப்பட்ட இரண்டு தியேட்டர்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

Kitchenerஇல் உள்ள Landmark Cinemas என்ற தியேட்டரில் நுழைந்த ஒரு நபர், திரைப்படம் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும்போது கூர்மையான ஒரு பொருளால் திரையை கிழித்துள்ளார்.

பின்னர் அவர் உட்கார்ந்திருந்த பார்வையாளர்கள் மீது பெப்பர் ஸ்பிரேயை தெளித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இரண்டு மணி நேரத்திற்குப்பின், Whitbyயிலுள்ள Landmark Cinemas என்ற தியேட்டரில் நுழைந்த ஒரு நபர், முந்தைய தியேட்டரில் நடந்ததுபோலவே, திரைப்படம்

திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும்போது கூர்மையான ஒரு பொருளால் திரையை கிழித்துவிட்டு, பார்வையாளர்கள் மீது பெப்பர் ஸ்பிரேயை தெளித்துவிட்டு தப்பியுள்ளார்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கிடைத்த தகவலின்படி, உள்ளூர் கும்பல் ஒன்று இந்த தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒரு தெலுங்கர் மற்றும் மூன்று தமிழர்கள் அடங்கிய உள்ளூர் கும்பல் ஒன்று, சை ரா நரசிம்ம ரெட்டி படத்தை கனடாவில் திரையிடவிடாமல் தங்களால் ஆன மட்டும் முயற்சித்ததாக தெரிகிறது.

இந்த கும்பல் பிராந்திய மொழி திரைப்படங்களை சில தியேட்டர்களுக்கு விநியோகிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த படங்களுக்கு ஆகும் வசூலை குறைத்துக் கூறுவது அவர்களது வழக்கமாம். அதாவது ஒரு படத்திற்கு 100,000 அமெரிக்க டொலர்கள் வசூலானால், வெறும் 20,000 அல்லது 30,000 அமெரிக்க டொலர்கள் மட்டுமே வசூலாவதாக இந்த உள்ளூர் மாபியா காட்டுவதுண்டாம்.

அப்படியிருக்கும் நிலையில், சை ரா நரசிம்ம ரெட்டி படத்தின் உரிமைகளை பஞ்சாபி ஒருவர் வாங்கி வெளியிட்டுள்ளார்.

இப்படியே விட்டால், உண்மையான வசூல் தொகை வெளியே தெரிந்துவிடும் என அஞ்சி அந்த கும்பல் படத்தை தடை செய்ய இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கருதப்படுகிறது.

இதற்கிடையில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், அவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்