கனேடிய பெண்ணின் சுற்றுலா திட்டத்தைக் கெடுத்த சீன பாஸ்போர்ட்!

Report Print Balamanuvelan in கனடா

குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த கனேடிய பெண்ணின் மொத்த திட்டத்தையும் கெடுத்துவிட்டது அவர் வைத்திருக்கும் சீன பாஸ்போர்ட்.

கனடாவில் வாழ்ந்து வரும் Ming Yang (32) தனது குடும்பத்துடன் கரிபியன் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தார்.

விமான டிக்கெட்டுகள் எல்லாம் பக்காவாக முன் பதிவு செய்யப்பட்டு தயாராக இருக்க, இன்னும் எட்டு நாட்களில் சுற்றுலா செல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தது குடும்பம்.

அவரும், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒன்பதுபேரும், ஒட்டாவாவிலிருந்து மியாமிக்கு விமானத்தில் பயணித்து, அங்கிருந்து Norwegian Escape என்னும் கப்பலில் பயணிக்க திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஒன்லைனில் செய்திகளை வாசித்துக்கொண்டிருந்த Ming Yang கண்களில் அந்த செய்தி பட்டுள்ளது.

அந்த செய்தியில், COVID-19, அதாவது கொரோனா வைரஸ் தொற்று அச்சம் நிலவுவதன் காரணமாக, சீன, ஹொங்ஹொங் மற்றும் மக்காவ் பாஸ்போர்ட் வைத்திருப்போர் Norwegian Escape கப்பலில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.

Ming Yang 15 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வரும் நிலையில், அவர் இன்னமும் தனது சீன பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில், கனடாவில் நிரந்தரக் குடியுரிமையும் பெற்றிருக்கிறார். அவரைத் தவிர அவருடன் பயணிக்கும் மற்ற அனைவரும் கனடா குடிமக்கள்.

என்றாலும், Ming Yang இல்லாமல் அவர்கள் யாருக்கும் சுற்றுலா செல்வதில் விருப்பமில்லை என்பதால், பத்து பேரும் சுற்றுலாவுக்கு திட்டமிட்டிருந்த நாளில் கனடாவிலேயேதான் இருக்கப்போவதாக முடிவு செய்துள்ளார்கள்.

சீனர்கள் என்பவர்கள் கொரோனா வைரஸ் அல்ல என்று கூறும் Ming Yang, இது பாரபட்சம் என்கிறார்.

Norwegian Escape கப்பலின் இந்த கொள்கை மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் Ming Yang, தான் பல ஆண்டுகளாக சீனா பக்கமே செல்லவில்லை என்றும், இது இனப்பாகுபாடு என்றும் கூறி வருந்துகிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers