கனடாவில் கொரோனாவால் எத்தனை சதவீதம் பேர் பாதிக்க கூடும்? சுகாதார துறை அமைச்சர் முக்கிய தகவல்

Report Print Santhan in கனடா
585Shares

கனடாவில் 30 முதல் 70 சதவீதம் வரை மக்கள் பாதிக்கப்படக் கூடும் என்று அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் பட்டி ஹட்ஜு கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கனடா பிரதமரின் மனைவி Sophie Gregoire-Trudeau பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை, House of Commons சுகாதாரக் குழுவில் கனடா சுகாதார அமைச்சர் Patty Hajdu, கொரோனாவை உலகசுகாதார அமைப்பு ஒரு தொற்று நோயாக அறிவித்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

நாட்டில் இந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில்,உலகளாவிய தொற்றுநோய்களின் விஷயத்தில் கனடாவிடம் தெளிவாக நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பது தெளிவாகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் வளர்ந்து வரும் கொரோனா வைரஸால் அவசர நிலைக்கு, விடையளிக்கும் வகையில்,நாட்டின் சுகாதார பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்றவற்றை சமாளிக்க, அரசு 1 பில்லியன் டொலர் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, கனடாவில் 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை இந்த நோயில் இருந்து 9 பேர் மீண்டுள்ளனர்.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC பொது மக்களுக்கு ஆபத்து குறைவாக இருப்பதாக கூறுகிறது), ஆனால், Patty Hajdu வரவிருக்கும் வாரங்களில் நாட்டில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று கூறியுள்ளார்.

பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை பலவிதமாக உள்ளன. ஆனால் மக்கள் தொகையில் 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை இருக்கலாம்.

இருப்பினும் இந்த பாதிப்புகளுக்கு நாம் எப்படி பதில் அளிக்கிறோம் என்பதை பொறுத்தே அதன் எண்ணிக்கை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்,

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்