கனடா பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Report Print Basu in கனடா

கனடாவில் 40% சிறு வணிகங்களில் திவால்நிலைக்கு அஞ்சியுள்ள நிலையில், ஊதியங்களை ஈடுகட்டும் திட்டத்தை கனடா அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது.

சில வணிகங்களுக்கு ஆகஸ்ட் இறுதி வரை கனேடிய அரசாங்கம் 75% ஊதியத்தை தொடர்ந்து செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வணிகங்கள் மீண்டும் திறக்கப்படுவது மெதுவாக தொடரும் நிலையில் பெருகிவரும் திவால்நிலைகளின் சாத்தியத்தை அரசாங்கம் ஒப்புக்கொள்வது போல் தெரிகிறது.

வணிக உரிமையாளர்களே, தயவுசெய்து இந்த அறிவிப்பிலிருந்து நம்பிக்கை கொள்ளுங்கள்.

நீங்கள் மீண்டும் வணிகங்களை திறக்கும் போது இயல்பு நிலைக்கு திரும்ப இப்போது சில பாதைகள் உள்ளன, எனவே தயவுசெய்து உங்கள் ஊழியர்களை மீண்டும் அழைத்து வாருங்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

வணிக நிறுவனங்கள் ஊதியங்களை ஈடுகட்டும் திட்டத்தை கனடா அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதை வரவேற்றாலும், பொருளாதார பணிநிறுத்தத்தின் போது குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் சேதங்கள் குறித்து தாங்கள் அச்சமடைந்துள்ளதாக பலர் கூறுகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்