20,000 ஊழியர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்திய கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Report Print Basu in கனடா

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் குறைந்தது 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர் கனடா அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது நிறுவனத்தின் 38,000 ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பாதிக்கின்றன என்று ஏர் கனடா தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயானது திட்டமிடப்பட்ட விமானச்சேவைகளை 95% குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, இன்று நாங்கள் மிகவும் கடினமான முடிவை எடுத்தோம், இது வருந்தத்தக்க வகையில் எங்கள் பணியாளர்களை 50 முதல் 60 சதவிகிதம் குறைப்பதாகும் என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு வணிகம் தொடங்கியவுடன் நிறுவனத்தை கட்டியெழுப்பி மீண்டும் நிலைநிறுத்த இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஏர் கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை செயல்படுத்த தொழிற்சங்கங்களுடன் பணியாற்றி வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்