காணாமல் போன போது சிவப்பு நிற ஆடையில் இருந்தார்! 15 வயது கனடிய சிறுமி குறித்து பொலிசார் கூறிய தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போன 15 வயதான சிறுமி பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி Anuhu Ali என்ற 15 வயது சிறுமி அக்டோபர் 1ஆம் திகதி வியாழன் காலை 10.53 மணிக்கு கடைசியாக Victoria Park + Clintwood Gate பகுதியில் காணப்பட்டார்.

பின்னர் காணாமல் போயிருக்கிறார் Anuhu Ali.

காணாமல் போன போது சிவப்பு நிற டீ சர்ட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாயமான Anuhu Ali தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அவரை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றி எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்