கனடாவில் மாஸ்க் அணியாத பெண் ஒருவர், ஆண் பயணி ஒருவர் மீது எச்சில் துப்பியுள்ளார்.
அங்கு என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை, ஆனால், அந்த ஆண், அருவருப்பாக இருக்கிறது என்று கூறியதாக தெரிகிறது.
உடனே மாஸ்க் அணியாத அந்த பெண், அந்த ஆண் முகத்தில் எச்சில் துப்பியிருக்கிறார். அத்திரமடைந்த அந்த ஆண் எழுந்து அந்த பெண்ணைப் பிடித்து தள்ள, மேலும் வாக்குவாதம் வலுக்க, அந்த பெண்ணைப் பிடித்து அவர் தள்ளியதில், பேருந்திலிருந்து தொபீரென வெளியே போய் விழுந்துள்ளார் அந்த பெண்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த பெண் பேருந்துக்கு வெளியே சென்று விழுவதையும், உடனே அவருக்கு உதவ ஒரு ஆண் ஓடுவதையும் காண முடிகிறது.
கனடாவில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்டவர்களை பொலிசார் தேடி வரும் நிலையில், பெண்ணை தாக்கியதற்காக அந்த ஆணை பொலிசார் கைது செய்வார்களா, அல்லது கொரோனா காலகட்டத்தில் மற்றவர் மீது எச்சில் துப்புவது குற்றம் என்பதாலும் மாஸ்க் அணியாததாலும் அந்த பெண்ணை கைது செய்வார்களா தெரியவில்லை!