கனடாவில் பெண்ணின் கையை பிடித்து காருக்குள் வலுக்கட்டாயமாக இழுந்த இளைஞன்: பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து தனது காருக்குள் ஏற்ற முயன்ற இளைஞனை பொலிசார் தேடி வருகின்றனர்.

Halifaxல் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று பகல் 12.30 மணியளவில் சாலையில் இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை காரில் அணுகிய 30களில் உள்ள நபர் காரை நிறுத்தி விட்டு அப்பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளான்.

பின்னர் காருக்குள் அவரை வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்றிருக்கிறான்.

ஆனால் அவன் பிடியில் இருந்து தப்பிய அப்பெண் தனக்கு தெரிந்த நபருடம் சென்று அனைத்தையும் கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பொலிசார் கூறுகையில், காரில் வந்த மர்ம நபர் கருப்பு கோர்ட் அணிந்திருந்தார், கண்ணாடியும், மாஸ்கும் அணிந்திருந்தார்.

அவர் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்