அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ்படம் ’காலா’

Report Print Kabilan in சினிமா

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம், அமெரிக்காவில் 322 திரையரங்குகளில் வெளியாவதால், அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ரஜினி நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் இந்தியாவில் நாளை வெளியாக உள்ளது. கர்நாடகாவில் மட்டும் இந்த படத்தின் வெளியீட்டிற்கு பிரச்சனை இருந்து வந்தது.

அதன் பின்னர், இதற்காக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கி ’காலா’ படத்தை திரையிட உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ’காலா’ திரைப்படம் அமெரிக்காவில் 322 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், அமெரிக்காவில் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை ‘காலா’ பெற்றுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்