கணித விஞ்ஞான வினாப் போட்டியில் களுவாஞ்சிகுடி மாணவர்கள் இரண்டாம் இடம்

Report Print Rusath in சமூகம்
41Shares
41Shares
lankasrimarket.com

பட்டிருப்பு வலய பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட கணித, விஞ்ஞான வினாப் போட்டியில் மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), களுவாஞ்சிகுடி மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு, பட்டிருப்பு துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இந்தப்போட்டி இடம்பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாடசாலை பிரதி அதிபர் எம்.சுபேந்திரராஜா சான்றிதழ்கள் வழங்கி வைத்துள்ளதுடன், 5, 000 ரூபா பணப்பரிசும், பதக்கங்களும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்துள்ளார்.

மேலும், போட்டியில் இந்த பாடசாலையைச் சேர்ந்த ஆர். கோமேதகி (தரம் 6), ரீ.அபிஸ்க்சன் (தரம் 7), ரீ.டஸ்மிதன் (தரம் 8) , ஈ.பிரியா (தரம் 9), கே.ரோமியா (தரம் 10), என.கிருந்திகரன் (தரம் 11) ஆகிய மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்