பாசிக்குடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பால்குட பவனி

Report Print Navoj in சமூகம்
74Shares
74Shares
lankasrimarket.com

பாசிக்குடா முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பால்குட பவனி சிறப்பான இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளதுடன், விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த 22ம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான திருச்சடங்கு எதிர்வரும் வியாழக்கிழமை திருக்குளிர்த்தி பாடலுடன் பாசிக்குடா கடலில் தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

கல்குடா ஆலயடி சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து பூஜைகள் இடம்பெற்ற பின்னர் ஆரம்பமான பால்குட பவனியானது கல்குடா வீதி, பாசிக்குடா பிரதான வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்துள்ளது.

மேலும், தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்