மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

குறித்த விழா விளையாட்டு குழுவின் தலைவர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் அடம்பன் ம.வி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேச செயலகங்கள் சார்பாக விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் கலந்து கொண்டிருந்தார்.

விளையாட்டு நிகழ்வுகளின் இறுதியில் முதலாம் இடத்தினை மன்னார் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகமும், மூன்றாம் இடத்தினை முசலி பிரதேச செயலகமும் பெற்று கொண்டு வெற்றிக்கேடயங்களை தன் வசப்பத்திக் கொண்டன.

இதன்போது வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேடயமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், வடமாகாண விளையாட்டுத்துறை அதிகாரி ஆர்.குருபரன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு பிரமேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், விளையாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்