உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் நினைவஞ்சலி

Report Print Navoj in சமூகம்

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்கள், அமைப்புகள் அஞ்சலி நிகழ்வினை அனுஸ்டித்துள்ளன.

சம்மாந்துறை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்தோருக்கான ஒருவருடநிறைவு அஞ்சலி நிகழ்வும் ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வும் இன்று சம்மாந்துறைவலயக்கல்வி பணிமனையில் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

செய்தி - சகாதேவராஜா

புளியந்தீவு

புளியந்தீவு இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டிலும் மேற்படி அனுஸ்டிப்பு நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கடந்த ஏப்ரல் 21 தாக்குதலில் உயிர்நீத்த அனைத்து உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயர்நீத்த உறவுகள் 31 பேரின் நினைவாக 31 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, விசேட இறைவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கல்முனையில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்